பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட்டின் 26 மணி நேர 'கவுன்ட் டவுன்'
🚀இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட்டின் 26 மணி நேர ‘கவுன்ட் டவுன்’ வெள்ளிக்கிழமை தொடங்கியது.
📌கரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் புதிய ராக்கெட்டுகள் எதுவும் விண்ணில் ஏவப்படவில்லை.
📌இந்நிலையில் 51ஆவது பி எஸ் எல் வி ராக்கெட்டான பிஎஸ் எல்வி சி 49 ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
📌அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் படங்களை எடுக்கும் தொழில்நுட்பம் கொண்ட சின்தடிக் அபர்சர் ரேடார் (synthetic aperture radar) இணைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
📌இதனுடன் இணைந்து லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4, அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்கள் என 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்படுகிறது.